என் மலர்
உள்ளூர் செய்திகள்
96 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 85 மனுக்கள் ஏற்கப்பட்டது.
- கோரிக்கை மற்றும் புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூரில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாமில் 96 பயனாளிகளுக்கு ரூ.12.89 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற முகாமில், பாலையூர், காஞ்சிவாய், நல்லாவூர், ஸ்ரீகண்டபுரம் ஆகிய கிராம ங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முகாமை யொட்டி செப்டம்பர் 5-ஆம் தேதியில் இருந்து அலுவலர்கள் பாலையூர் கிராமத்தில் முகாமிட்டு பொதுமக்களிடம் இருந்து பெற்ற 101 கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்ததில் 85 மனுக்கள் ஏற்கப்பட்டது. 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
அதன்படி, வருவாய் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா தலா ரூ.20,000 மதிப்பிலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் மற்றும் இதர உதவித்தொகை 34 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலும், திருமண உதவித்தொகை (மகன் திருமணம்) 11 பயனாளிகளுக்கு தலா ரூ.8,000 மதிப்பிலும், திருமண உதவித்தொகை (மகள் திருமணம்) 5 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பிலும், இயற்கை மரண உதவி த்தொகை 21 பயனாளிகளுக்கு தலா ரூ.21,500 உள்பட மொத்தம் 96 நபர்களுக்கு ரூ.12,89,700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆகியோர் வழங்கினர்.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை 7092255255 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் தெரிவிக்கலாம். அந்த கோரிக்கை மற்றும் புகார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்தித் தரப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, சமூக பாதுகாப்பு த் திட்ட தனித்துணை ஆட்சியர் கண்மணி, கோட்டாட்சியர் யுரேகா, ஒன்றியக்குழுத் தலைவர் மகேந்திரன், வட்டாட்சியர் சித்ரா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.