search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காய் பட்டணம் துறைமுகத்திலும் வாளை மீன் இறக்குவதற்கு அனுமதி- விஜய் வசந்த் எம்.பி.யிடம் மீனவர்கள் கோரிக்கை

    • மானசேகரம் ஸ்ரீ‌மகாவிஷ்ணு திருக்கோவிலுக்கு அன்னதான தளவாட பொருட்கள் வழங்க கோரிக்கை
    • அருமனை பேரூராட்சிக்கு உட்பட்ட மானசேகரம் ஊர் மக்கள், பஸ் வசதி செய்து தர வேண்டுகோள்

    கன்னியாகுமரி:

    அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான் தலைமையில் தேங்காய் பட்டணம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை, அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.

    அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் துறைமுகத்திலும் வாளை மீன் இறக்குவதற்கு அனுமதி பெற்று தர வேண்டும் என்று கூறி, இதுதொடர்பாக மனு அளித்தனர்.

    இதேபோல், கன்னியாகுமரி தொகுதியில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது அருமனை பேரூராட்சிக்கு உட்பட்ட மானசேகரம் ஊர் மக்கள், பஸ் வசதி செய்து தர கோரியும், மானசேகரம் ஸ்ரீமகாவிஷ்ணு திருக்கோவிலுக்கு அன்னதான தளவாட பொருட்கள் வழங்க கோரியும் மனு அளித்தனர். முன்னாள் காங்கிரஸ் வட்டார தலைவர் சதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×