search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம்
    X

    அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம்

    • எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாள் விழாபொதுக்கூட்டம் நடந்தது.
    • தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அதில், ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 106&வது பிறந்த நாள் விழாபொதுக்கூட்டம் நடந்தது.

    கிருஷ்ணகிரி 5ரோடு ரவுண்டானா அருகில், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின்106-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்

    அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், பையூர் ரவி, சைலேஷ் கிருஷ்ணன், காவேரிப்பட்டணம் பேரூராட்சி செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நகர செயலாளர் கேசவன் வரவேற்புரையாற்றினார்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பேசியதாவது:-

    தமிழகத்தில் கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை அனைத்திற்கும் இன்றைய தி.மு.க., அரசு மூடு விழா நடத்திவிட்டது. திராவிட மாடல் ஆட்சி என்று பேசும் தி.மு.க.,வினருக்கே அதுபற்றி தெரியவில்லை. தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை தலைவிரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கி சீர்கெட்டுள்ளது. பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அதில், ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.

    ஈரோடு இடைத் தேர்தலில் வெற்றி பெற்றே தீருவோம். பன்னீர்செல்வம் துரோகி. கட்சியை அழிக்கப் பார்க்கிறார். 63எம்.எல்.ஏ.,க்கள், 2,100 பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களிடம் உள்ளனர். சசிகலா ஆட்சியைப் பிடிப்பேன் என்றார். ஜெயலலிதாவின் சமாதியில் சத்தியம்செய்தார். ஆனால் தற்போது வீட்டிலேயே முடங்கிப்போனார். அவரை நம்பி இருந்த தினகரன்

    தனியாக கட்சியை நடத்து கிறார். எனவே அ.தி.மு.க,.வை யாராலும் அழிக்க முடியாது. கட்சியி ல்இல்லாதவர்களுக்கும், அங்கு போகாதவர்களுக்கும் பன்னீர்செல்வம் அணியில் பதவி கொடுக்கின்றனர்.பதவி கொடுப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, மாவட்ட கவுன்சிலர்கள் ஜெயா ஆஜி, சங்கீதா கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×