search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூரில் இன்று மாலை நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்- ஆ.ராசா எம்.பி. பேசுகிறார்
    X

    ஆ.ராசா எம்.பி.,          கிரகாம்பெல்.

    வள்ளியூரில் இன்று மாலை நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்- ஆ.ராசா எம்.பி. பேசுகிறார்

    • கூட்டத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமை தாங்குகிறார்.
    • தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி. கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிகிறார்.

    வள்ளியூர்:

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வள்ளியூர் கலையரங்க திடலில் இன்று ( 31-ந் தேதி ) மாலை 6 மணிக்கு தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்திற்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் தலைமை தாங்குகிறார். ஞான திரவியம் எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    நெல்லை கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கிராகம்பெல் வரவேற்று பேசுகிறார். கூட்டத்தில் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை மந்திரியுமான ஆ. ராசா எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றிகிறார். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

    Next Story
    ×