என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
பட்டா கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு
Byமாலை மலர்27 March 2023 8:27 PM IST
- பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பட்டா வழங்கப்படவில்லை.
- இதன் காரணமாக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் தவித்து வந்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் ஊராட்சியில் அடங்கிய போரக்ஸ் நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இப்பகுதி மக்கள் பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பட்டா வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் பட்டா வேண்டி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அனு மீது விரைவாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஸ்வர்யா ராமநாதன் உறுதி அளித்தார்.
Next Story
×
X