என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெய்வேலியில் பரபரப்பு மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
    X

    நெய்வேலி இந்திராநகர் ஊராட்சியில் தனியார் மதுபான கடை அமைவதை கண்டித்து பா.ம.க சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் பங்கேற்றார்.

    நெய்வேலியில் பரபரப்பு மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

    • தனியார் மதுபானக் கூடம் நேற்று திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்களிடையே பலத்த எதிர்்ப்பு ஏற்பட்டது.
    • ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

    கடலூர்:

    நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் தனியார் தங்குவிடுதி பின்புறம், தனியார் மதுபானக் கூடம் நேற்று திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்களிடையே பலத்த எதிர்்ப்பு ஏற்பட்டது. தனைக் கண்டித்து பா.ம.க வடக்கு மாவட்டத்தின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மாலினி சண்முகவேல் தலைமை தாங்கினார். முக்கிய அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ஜெகன் இதுகுறித்து பேசியதாவது: இந்திரா நகர் ஊராட்சியில் தனியார் மதுபானக் கூடத்தை அனுமதிக்க மாட்டோம். அருகேயுள்ள வடக்குத்து ஊராட்சி மதுஇல்லா ஊராட்சியாக உள்ளது.

    இதற்கு நீதிமன்றம் உரிய சட்ட முறைகளை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலையில் மதுபானக் கடைகளுக்கு, தடை விதித்த நிலையில், மதுபானக் கூடம் விதிமுறைகளை மீறி அமைக்கப் பட்டுள்ளது. என்எல்சி மறுகுடியமர்வு வணிகபகுதியில், குடியிருப்புகள், அரசு பள்ளிக்கூடம் உள்ள இடத்தில் மதுபானக் கூடம் அமைந்துள்ளது. ,அமைதிப் பூங்கவாக திகழும் இங்கு, இந்த மதுபானக் கூடம் இயங்கினால், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடையும். எனவே இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த மதுபான கூடத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் அய்யா, அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் குறிக்கோளான மதுவில்லா தமிழகத்தை உருவாக்க பாடுபடுவோம், இவ்வாறு அவர் கூறினார். =இந்த ஆர்பாட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், மு.மாவட்ட துணைசெயலாளர் சண்முகவேல், அமைப்பு செயலாளர் கயல்ராஜன், இந்திரா நகர் ஊராட்சி துணைத் தலைவர் உமாராமதாஸ், வார்டு உறுப்பினர் சுமதி ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், பிரகாஷ், ராஜா, பிரபாகரன், தேவா, கிருஷ்ணமூர்த்தி, சிவராமன், அமிர்தலிங்கம், மணிக்கண்ணன், குமரவேல், ஹரி, மற்றும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிந்த நெய்வேலி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.ெே

    Next Story
    ×