search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிமுத்தாறு மலைப்பகுதிக்கு பொதுமக்கள் இடையூறு இன்றி செல்ல அனுமதி அளிக்க வேண்டும்- வனத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தல்
    X

    தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன் தலைமையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் மனு கொடுத்த போது எடுத்தபடம்.

    மணிமுத்தாறு மலைப்பகுதிக்கு பொதுமக்கள் இடையூறு இன்றி செல்ல அனுமதி அளிக்க வேண்டும்- வனத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தல்

    • தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரான வக்கீல் பிரபாகரன் தலைமையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
    • மணிமுத்தாறு மலைப்பகுதிக்கு அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இடையூறு இன்றி செல்ல வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆவுடையப்பன் அறிவுறுத்தலின்படி, தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரான வக்கீல் பிரபாகரன் தலைமையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

    கோரிக்கை

    அதில், மணிமுத்தாறு மலைப்பகுதிக்கு அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இடையூறு இன்றி செல்ல வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும். மணிமுத்தாறு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் வனத்துறை மூலம் செய்ய வேண்டிய பணிகளை நிறை வேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    சந்திப்பின் போது பேரூர் தி.மு.க செயலாளர், முத்துகணேசன், மணிமுத்தாறு பேரூராட்சி தலைவர் அந்தோனி யம்மாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×