என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![புகையில்லா பொங்கல் கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -கடையநல்லூர் நகராட்சி தலைவர் வேண்டுகோள் புகையில்லா பொங்கல் கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -கடையநல்லூர் நகராட்சி தலைவர் வேண்டுகோள்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/11/1820143-5kadayanalurmunicipalchairman.webp)
X
புகையில்லா பொங்கல் கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -கடையநல்லூர் நகராட்சி தலைவர் வேண்டுகோள்
By
மாலை மலர்11 Jan 2023 2:03 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடையநல்லூர் நகராட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவையற்ற குப்பைகள் மற்றும் பொருட்களை எரிக்ககூடாது
- பொங்கல் பண்டிகையை சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் புகையில்லா பொங்கலாக கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சித் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடையநல்லூர் நகராட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவையற்ற குப்பைகள் மற்றும் பொருட்களை எரிக்ககூடாது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் புகையில்லா பொங்கலாக கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்களும், வர்த்தகர்களும் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து போகியன்று அப்புறப்படுத்தும் கழிவுப்பொருட்களை நகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனங்களிலோ அல்லது நகராட்சி குறிப்பிட்டுள்ள கழிவு சேகரிப்பு இடங்களிலோ ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
X