என் மலர்
உள்ளூர் செய்திகள்
ரத்தினபுரி போலீஸ்நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை
- தொடர் கொள்ளை, செயின் பறிப்பால் பொதுமக்கள் அச்சம்
- பொதுமக்களுடன் அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு
ரத்தினபுரி,
கோவை ரத்தினபுரி அருகே உள்ள ஜி.பி.எம். நகர், பூம்புகார் நகர், சேவா நகர், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தை இன்று முற்றுகையிட்டு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 15 நாட்களாக எங்கள் பகுதியில் 7-க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. நேற்று பகல் நேரத்திலேயே ஒரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டது.
எனவே இந்த பகுதியில் குடியி ருக்கும் எங்களுக்கு மிகவும் அச்சமாக உள்ளது. பெண்களாகிய நாங்கள் மிகுந்த பயமுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளோம். எனவே தொடர் கொள்ளை யில் ஈடுபடும் நபர்களை கைது செய்து எங்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலையில் நடை பயிற்சி சென்ற செயின் பறிப்பு முயற்சி நடந்துள்ளது. இதன் காரணமாக நகைகள் அணிந்து வெளியே செல்ல அச்சமாக உள்ளது.
எனவே போலீசார் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியி ருந்தனர். பொதுமக்களுடன் அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரன் புகார் மனு அளிக்க வந்தார்.பெண்கள் உள்பட 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் திடீரென போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.