என் மலர்
உள்ளூர் செய்திகள்

தடுப்பூசி முகாம் நடந்தது.
வெறிநாய் தடுப்பூசி முகாம்
- வெறிநாய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான தடுப்பூசி முகாம்.
- கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, அவரிக்காடு ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநாய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.
தலைஞாயிறு ஒன்றிய குழு தலைவர் தமிழரசி முகாமை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரேணுகா நேதாஜி, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர் மச்சழகன், கால்நடை மருத்துவர் முருகேசன், சண்முகநாதன், பாலசுந்தரம், செந்தில் உள்ளிட்ட கால்நடை துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பின்பு ஊராட்சியில் உள்ள மக்களுக்கு கால்நடை மருத்துவர் முருகேசன் வெறிநாய் கடி மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து விளக்க உரையாற்றினார்.
இதில் ஏராளமான கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.