என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாய்களுக்கு தடுப்பூசி போடபட்டது.
வேதாரண்யத்தில் வெறிநாய் தடுப்பூசி முகாம்
- உம்பளச்சேரி கால்நடை மருந்தகத்திற்கு வெறிநோய் தடுப்பூசி மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நடந்தது.
- வெறி நோய் தடுப்பூசி முகாமில் 132 நாய்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் உம்பளச்சேரி கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட நத்தப்பள்ளம் ஊராட்சியில் ஒன்றிய அளவிலான வெறிநோய் தடுப்பூசி மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ் நாகப்பட்டினம் கோட்டம் உதவி இயக்குனர் அசன் இப்ராஹீம் வழிகாட்டுதல் படி நடைபெ ற்ற முகமாமிற்கு தலைஞாயிறுஒன்றிய குழு தலைவர் தமிழரசிதலைமையில் வதித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் ஆதிரவிச்சந்திரன் முன்னிலையில் வகித்தார் ஊராட்சி செயலாளர் வீரையன் வரவேற்றார்.
வெறி நோய் தடுப்பூசி முகாமில் 132 நாய்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது.
மேலும் நீர்முளை புனித சவேரியார் மேல் நிலைப் பள்ளியில் 150 மாணவர்களுக்கு வெறிநோய் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் துணை இயக்குனர் டாக்டர் விஜயகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில், ஸ்ரீதர் பாபு, சண்முகநாதன், திவாகர் கால்நடை ஆய்வாளர் கருணாநிதி உதவியாளர் நல்ல தம்பி,மாலா ஊராட்சி துணைத் தலைவர் ரேவதி மற்றும் கிராமக்கள் கலந்து கொண்டனர்.