search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பாத யாத்திரை- ஆதரவு திரட்டிய விஜய் வசந்த் எம்.பி.
    X

    விஜய் வசந்த் ஆலோசனை

    கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பாத யாத்திரை- ஆதரவு திரட்டிய விஜய் வசந்த் எம்.பி.

    • கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் யாத்திரையை சிறப்பாக நடத்திட மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் முடிவு
    • ஆலோசனை கூட்டங்களில் கலந்துகொண்டு இந்த யாத்திரையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் விஜய் வசந்த்

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் யாத யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. கூறியிருப்பதாவது:-

    செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி துவங்கி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவிருக்கும் இந்திய இணைப்பு யாத்திரை செப்டம்பர் 7 முதல் 10 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவிருக்கிறது. வரலாறு காணாத அளவிற்கு மிகப்பெரிய ஒரு வெற்றி யாத்திரையை நடத்துவதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் முடிவு செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த யாத்திரையை மிகச் சிறப்பாக நடத்திட குமரி மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட கமிட்டிகள் முடிவெடுத்துள்ளது.

    அதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் கன்னியாகுமரி கிழக்கு மற்றும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கமிட்டிகளின் சார்பாக இன்று நாகர்கோவிலிலும் மார்த்தாண்டத்திலும் நடைபெற்றது.

    கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி உதயம் தலைமையிலும் மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமையிலும் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டங்களில் கலந்துகொண்டு இந்த யாத்திரையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் கேட்டுக் கொண்டேன்.

    குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாநில மாவட்ட நிர்வாகிகள் வட்டாரத் தலைவர்கள், துணை அமைப்புகளின் தலைவர்களும் நிர்வாகிகளும் இந்த கூட்டங்களில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறினர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×