என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
- ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ம் வகுப்பு மாணவா்கள் சோ்க்கை நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்
மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ம் வகுப்பு மாணவா்கள் சோ்க்கை நடைபெற உள்ளது. விண்ணப்பதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலா் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 1.7.2023 அன்று 11 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். 2.7.2010-க்கு முன்னதாகவும், 1.1.2012-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது.
இந்த வயது வரம்பில் எந்த தளா்வும் இல்லை. இதற்கான எழுத்துத் தோ்வு 3.12.2022 அன்று நடைபெற உள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04567-230045 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story