search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதுவது போல் வந்ததை கண்டித்த வாலிபர் மீது தாக்குதல்
    X

    முகம்மது ஆசிப்.

    வாகனம் மோதுவது போல் வந்ததை கண்டித்த வாலிபர் மீது தாக்குதல்

    • தேவகோட்டையில் வாகனம் மோதுவது போல் வந்ததை கண்டித்த வாலிபரை 10-க்கும் மேற்பட்டோர் தாக்கினர்.
    • தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    தேவகோட்டை

    ராமநாதபுரம் மாவட்டம் வீரசங்கிலி மடத்தை சேர்ந்தவர் பீர்முகமது. இவரது மகன் முகம்மது ஆசிப்(23). கூலி தொழிலாளி. இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை முகமதியர் பட்டணம் பகுதியில் உள்ள தனது உறவினர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் முகமதுஆசிப் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது நகராட்சி சமுதாய கூடம் அருகில் வந்தபோது எதிரே இருசக்கர வாக னத்தில் வந்த ஒருநபர் மோதுவது போல் வந்துள்ளார்.

    இதனை முகமதுஆசிப் கண்டித்தார். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் செல்போன் மூலம் சிலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முகமது ஆசிப்பை தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை பொது மக்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    10-க்கும் மேற்பட்ட நபர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இதுபற்றி தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து 5-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினார்.

    Next Story
    ×