என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த கழிவறை கட்டிடம்.
இடிந்து விழும் நிலையில் கழிவறை கட்டிடம்
- அபிராமம் பஸ் நிலையம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள கழிவறை கட்டிடத்தை சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர.
- இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக இருந்து வருகிறது.
அபிராமம்,
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பஸ் நிலையம் அருகே 10 ஆண்டுகளுக்கு முன் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.
தொடக்கத்தில் 2 ஆண்டுகள் மட்டுமே இந்த கழிவறையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இங்கு மோட்டார் பழுதடைந்து கிடப்பதால் அதை சரிசெய்து கொடுக்க வேண்டும், கழிவறையை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இந்த கட்டிடம் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டங்களும் இங்கு அதிக அளவில் உள்ளன.
இந்த கழிவறை அருகே பஸ் நிறுத்தம் இருப்பதால் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பயத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது.
எனவே இந்த கழிவறையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.