search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அழிந்து வரும் பழந்தின்னி வவ்வால்கள்
    X

    அழிந்து வரும் பழந்தின்னி வவ்வால்கள்

    • பழந்தின்னி வவ்வால்கள் அழிந்து வருகிறது.
    • விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மரங்கள் உள்ள இடங்களில் ஏராளமான பழந்தின்னி வவ்வால்கள் வாழ்கின்றன. இவற்றை சிலர் மருந்திற்காக வேட்டையாடுவதாக புகார் எழுந்துள்ளது. கூட்டமாக வாழும் மரங்களில் சிலர் கற்களை வீசி விரட்டுகின்றனர். எனவே குறைந்து வரும் பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேணடும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பழங்களை உண்டு வாழும் வவ்வால்கள் கிராமப்பகுதி களில் காணப்படுகின்றன. வவ்வால்களால் யாருக்கும் பெரிய அளவில் தொல்லை கிடையாது. இரவில் மட்டுமே தங்களுக்குரிய இரையை தேடி செல்கின்றன. பழந்தின்னி வவ்வால்கள் இரவு நேரங்களில் பழத்தின் சாறை மட்டுமே உறிஞ்சி குடிக்கும். பழத்தின் சக்கையை உமிழ்ந்து விடும். பூக்களில் உள்ள தேனையும் குடிக்கும், என்கின்றனர்.

    வவ்வால்கள் பெரும்பாலும் பழைய கட்டிடங்கள், அடர்ந்த மரங்களில் வாழ்கின்றன. மருத்துவ குணமிக்கதாக கருதி சிலர் வவ்வால்களை வேட்டையாடு கின்றனர். இதன் விளைவாக ஆண்டு தோறும் பழந்தின்னி வவ்வால்க ளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

    இவற்றை காண்பதே அரிதாகி வரும் நிலையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களில் பல ஆயிரம் பழந்தின்னி வவ்வால்கள் வாழ்கின்றன. அவற்றை சிலர் கல்வீசி தாக்குவது உள்ளிட்ட தொந்தரவுகளை செய்வதால் அச்சத்தில் மின் கம்பிகளில் அடிபட்டும் இறக்கின்றன.

    எனவே தற்காலத்தில் குறைந்து வரும் பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×