என் மலர்
உள்ளூர் செய்திகள்
முகம்மது சதக் கல்லூரியில் பொறியாளர் தினவிழா
- முகம்மது சதக் கல்லூரியில் பொறியாளர் தினவிழா நடந்தது.
- 100 ஆசிரியர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
கீழக்கரை
கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் மற்றும் பொறியாளர் தினவிழா முதல்வர் முகம்மது ஷெரீப் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் செந்தில் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கவிஞர் நந்தலாலா கலந்து கொண்டு பேசினார்.
முன்னாள் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளரும், கீழக்கரை ஹைரத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளி செயலாளருமான சாதிக்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பணி புரியும் 60 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை சிறப்பு விருந்தினர், முதல்வர் இணைந்து வழங்கினர். அண்ணா பல்கலைக்கழக தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்று தந்த ஆசிரியர்கள் மற்றும் தேசிய, சர்வதேச அளவில் ஆய்வறிக்கை சமர்ப்பித்த 100 ஆசிரியர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
திட்ட அதிகாரி திராவிடச் செல்வி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ரிலாவுர் ரஹ்மான், அகமது ஹூசைன் ஆசிப், பைசல் முஹ்தார் ஹூசைன், அமானுல்லா கான் ஆகியோர் செய்தனர்.