search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் தர்ணா போராட்டம்
    X

    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்களை படத்தில் காணலாம்.

    அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் தர்ணா போராட்டம்

    • மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலரை கண்டித்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆறு விதமான தணிக்கைகளை மாற்றி ஒரே ஒரு தணிக்கை மட்டுமே நடத்தப்படுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ராமநாதபுரம்

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப் பேறு பிரிவில் மதுரை மாந கராட்சி சுகாதார அலுவலர் வினோத் அத்துமீறி நுழைந்து மருத்துவர்கள் மற்றும் பேரா சிரியர்களை மரியாதை குறைவாக நடத்தி, மருத்து வர்கள் மற்றும் பணியாளர் களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் எழுந்தது.

    அவரை பணியிடை நீக்கம் செய்ய கோரியும், மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்க கோரியும் தமிழகம் முழு வதும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவம னையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. மாவட்ட தலை வர் மலையரசு தலைமை தாங்கினார்.

    மாவட்ட இணைச்செயலா ளர் டாக்டர் அறிவழகன் முன்னிலை வகித்தார். மகப் பேறு துறைத்தலைவர் டாக்டர் ரமணீஸ்வரி, டாக் டர்கள் சிங்காரவேலன், சந்தானக் கண்ணன், பாண் டிச்செல்வம், நந்தினி, வஹிதா, ஜெகப்ரியா உட் பட 20-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்சி சுகா தார அலுவலரை உடனடி யாக பணி நீக்கம் செய்தல், மகப்பேறு மருத்துவர்களின் பணியிடங்களை இரட்டிப் பாக்குதல், கூடுதல் மகப் பேறு மருத்துவர்களி உடன டியாக பணியில் அமர்த்து தல்,

    மகப்பேறு இறப்பில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கான தணிக்கை மட்டுமே மாவட்ட அளவில் கலெக்டர், இணை இயக்குனர், துணை இயக்கு னர்களை கொண்டு நடத்தப் படுதல் தற்போது நடைமு றையில் உள்ள ஆறு வித மான தணிக்கைகளை மாற்றி ஒரே ஒரு தணிக்கை மட்டுமே நடத்தப்படுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இந்த அனைத்து போராட்டங்களுக்கு பிறகும் உரிய தீர்வு ஏற்படாவிடின் போராங்களை தீவிரப்ப டுத்துவது குறித்து வரும் 16-ந்தேதி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுவில் முடி வெடுக்கப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    Next Story
    ×