என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்ட வேண்டும் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்ட வேண்டும்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/27/1972588-pasumponkathiravan.webp)
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் பார்வர்ட் பிளாக் மாநில தலைவர் கதிரவன் தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்ட வேண்டும்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்ட வேண்டும்.
- பார்வர்ட் பிளாக் கோரிக்கை வைத்துள்ளனர்.
பசும்பொன்
கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் சிலைக்கு பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் மாநில தலைவர் கதிரவன் மாலை அணி வித்து மரி யாதை செலுத்தப்பட்டது.
பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு தொகுதி கேட்டு பெறப் படும். சுதந்திரப் போராட்ட தலைவர்களின் குருபூஜை, பிறந்தநாள் விழா நிகழ்ச்சி களின்போது 144 தடை உத்தரவு விதிப்பதை ஏற்க முடியாது. ஆனால் தடை களையும் மீறி லட்சக் கணக்கில் மக்கள் திரளுகின்றனர்.
அதனால் 144 தடை விதிக்கப்பட கூடாது. மக்கள் தொகை கணக் கெடுப்புடன், சாதி வாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும். அதுவரை 20 சதவீத இட ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யக் கூடாது. கமுதி பகுதியில் குண்டாறு, மலட் டாறுகளை தூர்வாரி விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மத்தியக் கட்டுப்பாட்டு குழு தலைவர் மாநிலத்தலைவர் முத்துராம லிங்கம், மாநிலச் செயலாளர் இளங்கோ, ராமநாதபுரம் மாவட்ட அமைப்பு செய லாளர் பி.கீரந்தை வீரப் பெருமாள், சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.பி.யோகநாதன், மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆசைகுமார், ஆதிசேசன், மாணவர் அணி மத்தியக் குழு உறுப்பினர் மு.வெள்ளைப்பாண்டியன், தேவர் நேதாஜி ஆராய்ச்சியாளர் மற்றும் ஆப்பநாடு ஆய்வு குழு தலைவர் மாயகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.