என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீதியில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்த நோயாளிகள்

- வீதியில் மனநலம் பாதித்த நோயாளிகள் சுற்றித்திரிகின்றனர்.
- காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்காவிற்கு தமிழ் நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங் களில் இருந்து ஏராள மானோர் வந்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத் தில் அரசு மன நலகாப்பகம் குறைந்தபட்சமே உள்ளது.
ஏர்வாடி தர்காவில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் தனியார் அறக்கட்டளை மூலம் குறிப்பிட்ட நபர் களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஏழை, எளிய மக்கள் அழைத்து வரும் மனநலம் பாதிக்கப் பட்ட வர்களை கவனிக்க வழியின்றி ராமநாத புரம், ஏர்வாடி, கீழக்கரை ஆகிய பகுதிகளில் இறக்கி விட்டுச்செல்லும் நிலை இருந்து வருகிறது.
இப்படி ஆதரவின்றி விடப்படுபவர்கள் வாகனங்கள் செல்லும் வழியில் உள்ள தடுப்புசுவர்களின் மீது ஏறி ஆபத்தான முறை யில் அமர்வதும் அதில் உறங்குவதுமாக உள்ளனர். சிலர் வீதிகளில் கிடைக்கும் உணவுகளை உண்டு சுற்றி திரியும் நிலை உள்ளது. சிலர் உடல் நிலைபாதிக்கப் பட்டு சாலையோரம் விழுந்து கிடக்கின்றனர்.
மேலும் சிலர் வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் சூழ்நிலை உள்ளது. ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இது போன்ற மனநிலை பாதிக்கப்பட்ட வர்கள் அதிகம் பேர் நடமாடுகின்றனர்.
இப்படி சாலையில் சுற்றி திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து ஏர்வாடி தர்கா வில் உள்ள மனநல காப்பகத்தை விரிவுபடுத்தி வீதி களில் சுற்றித்திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் ஒப்படைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.