என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
என்.சி.சி. மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
By
மாலை மலர்2 Oct 2022 2:13 PM IST

- என்.சி.சி. மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- 100-க்கும் மேற்பட்டோர் மரம் நடுதல் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பங்கேற்றனர்.
ராமநாதபுரம்
உலகம் வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் மரம் நடுதல் பற்றிய விழிப்புணர்வு பேரணி முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி அச்சுந்தன்வயல் செக்போஸ்ட் வரை சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது. தேசிய மாணவர் படை மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மரம் நடுதல் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பங்கேற்றனர். பேராசிரியர்கள் ஜெயமுருகன், துரைப்பாண்டி, சந்திர சேகரன், மணிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை லெப்டினன்ட் உத்திரசெல்வம் செய்திருந்தார்.
Next Story
×
X