என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலியான சிதம்பரம்
கார் மோதி முதியவர் பலி
- கார் மோதி முதியவர் பலியானார்.
- பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டவர்கள் கார்களில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் பருத்தியூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 70). சேந்தகனி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(65). இவர்கள் திருவாடானையை அடுத்த சின்னக்கீரமங்கலம் ரவுண்டானா பகுதியில் உள்ள கடை முன்பு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டவர்கள் கார்களில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
இதில் ஒரு கார் வேகமாக வந்தது. அது கடை முன்பு நின்று கொண்டிருந்த சிதம்பரம், வேல்முருகன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விபத்தில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். வேல்முருகன் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சை்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேர் மீது மோதிய காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.