என் மலர்
உள்ளூர் செய்திகள்
தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோஷ வழிபாடு
- தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு பால், பழம், பன்னீர், சந்தனம், தயிர், இளநீர், அரிசிமாவு ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்தி வீதி உலா நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அபிஷேக பால், நெய்வேத்திய சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதே போல தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆலயம், தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் ஆலயம், எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் ஆலயம், ஓரியூர் சேயுமானவர் கெம், திருவாடானை ஆதி ரத்தினேஸ்வரர் கோவில் ஆகிய சிவாலயங்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.