என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரம்ஜான் நலத்திட்ட உதவிகள்

- த.மு.மு.க- ம ம.க. சார்பில் ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
- கிளை தலைவர் ஹாஜா நஜ்முதீன் முன்னிலையில் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க- ம ம.க. சார்பில் ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லா கான் அறிவுரையின் பேரில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 840 மதிப்பபுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் நிதி உதவியை ஏழைகளுக்கு வழங்கினர். 170 குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி, உணவு பொருட்கள் ரூ. 1லட்சத்து 23 ஆயிரத்து 700 ரூபாய், 12 பேருக்கு ரூ.500 வீதம் ரூ.6 ஆயிரம், கல்வி உதவியாக ரூ.22 ஆயிரம், மருத்துவ உதவி 2 பேருக்கு ரூ.20 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 840 மதிப்பில் உதவிகளை மாவட்ட பொருளாளர் பனைக்குளம் பரக்கத்துல்லா தலைமையில் கிளை தலைவர் ஹாஜா நஜ்முதீன் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இதில் ம.ம.க. செயலாளர் பாலகிருஷ்ணன், த.மு.மு.க., ம.ம.க. பொருளாளர் நவீன் பாதுஷா, மூத்த நிர்வாகி செய்யது முகமது, கிளை நிர்வாகிகள் மதார், அர்ஜுணை குமார், கரீம் கனி,ஹபீப் ராஜா,பாருக் உசேன், ராஜா சலீம்,ரியாஸ், நாகூர் கனி, சேக், அஜாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.