search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் நாளை சந்தனக்கூடு திருவிழா
    X

    ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் நாளை சந்தனக்கூடு திருவிழா

    • ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் நாளை சந்தனக்கூடு திருவிழா நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
    • பக்தர்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் அடங்கப் பட்டிருக்கும் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் 849-ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நாளை (12-ந்தேதி) நடை பெறுவதையொட்டி, வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஏர்வாடிக்கு வரத் துவங்கினர். இதனால் தர்கா பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் சந்தனக்கூடு திருவிழா கடந்த 21-ந் தேதி மவ்லுது (புகழ்மாலை) ஓதப்பட்டு துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி தர்காவில் மின் அலங்காரம் செய்யும் பணி மதுரை மதினா லைட் நிறுவனத்தினர் செய்து வரு கின்றனர்.

    நாளை மாலை 4.30 மணிக்கு யானை. குதிரையு டன் ஊர்வலமாக சென்று தர்்காவில் இருந்து போர்வை எடுக்கும் விழா நடைபெறுகிறது. அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, அலங்கார ரதத்து டன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு. காலை 5 மணிக்கு தர்கா வந்தடையும், தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த் தனையும், தொடர்ந்து தர்கா வில் சந்தனம் பூசும் நிகழ்சசி நடைபெறும்.

    மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்திலிருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தர்கா வளாகத்தில் மருத்துவக்குழுவினர் முகா மிட்டு தயார் நிலையில் உள்ளனர். தட்டுப்பாடு இல்லாமல் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க சிறப்பு ஏற் பாடுகள் செய்யப் பட்டு ள்ளது. தர்கா வளாகத்தில் கூடுதலாக சிறப்பு கண்காணிப்பு கேராக்கள் பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. குப்பைகள் உடனுக்குடன் அகற்ற 50-க்கும் அதிகமான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளுர் விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகை யில் 24-ந்தேதி (சனிக் கிழமை) வேலை நாளாக அறிவிக்கப் படுவதாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித் துள்ளார்.

    எஸ்.பி., தங்கதுரை உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். தர்கா நிர்வாக சபை தலைவர் பாக்கீர் சுல்தான் லெவ்வை, செயலாளர் சிராஜ்தீன், துணைத் தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஏற் பாடுகளை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×