என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மாநில அளவிலான செஸ் போட்டி மாநில அளவிலான செஸ் போட்டி](https://media.maalaimalar.com/h-upload/2022/06/10/1709781-rmd-01.jpg)
செஸ் போட்டியை இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் பார்வையிட்டார்.
மாநில அளவிலான செஸ் போட்டி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ராமநாபுரத்தில் மாநில அளவிலான செஸ் போட்டியில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- செஸ் போட்டி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதல்வர் முகம்மது செரீப் தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட சதுரங்கம் கழகம் சார்பில் 34-வது 9 வயதிற்குட்பட்டோர் பொது மற்றும் சிறுமியர்களுக்கான மாநில அளவிலான சாம்பியன்ஷிப் செஸ் போட்டி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதல்வர் முகம்மது செரீப் தலைமையில் நடந்தது.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தரம் வரவேற்றார்.
கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், கல்லூரி துணை முதல்வர் செந்தில்குமார், கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, தமிழ்நாடு செஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளர் எப்ரோம், துணைத் தலைவர் தேவி உலக ராஜ், டைமண்ட் சீ புட்ஸ் எக்ஸ்போர்ட்டர்ஸ் அன்பழகன், ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் புரவலர்கள் சண்முக சுந்தரம், ராஜாராம்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ராமநாதபுரம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து 200-க்கும் அதிகமான குழந்தைகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலாளர் ரமேஷ் பாபு, கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் குமார் ஆகியோர் செய்தனர்.