என் மலர்
உள்ளூர் செய்திகள்
கல்லூரியில் படிக்க வைக்காததால் மாணவி தற்கொலை
- ராமநாதபுரம் அருகே கல்லூரியில் படிக்க வைக்காததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
- பிளஸ்-2 படித்து விட்டு பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மூத்த மகள் சேதுபிரியா (வயது21). இவர் பிளஸ்-2 படித்து விட்டு பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சரவணின் 2-வது மகன் பிளஸ்-2 படித்து முடித்ததும் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று வீட்டில் பேசி வந்துள்ளனர். தன்னை மட்டும் கல்லூரியில் சேர்க்கவில்லை. தம்பியை கல்லூரியில் சேர்க்கிறார்கள் என்று வேதனையடைந்தார்.
இதைத்தொடர்ந்து சேதுபிரியா தனியாக இருந்தபோது எலி மருந்தை சாப்பிட்டுவிட்டு இரவு தூங்கியுள்ளார். காலையில் மூக்கில் ரத்தம் வந்துள்ளது.
இதுபற்றி அறிந்த அவரது பெற்றோர் சேதுபிரியாவை மீட்டு மண்டபம் முகாம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றதும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்தவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மாணவியின் தாய் மலர்விழி அளித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.