என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவி அதிபா.
38 மாவட்டங்களின் பெயர்களை 19 விநாடிகளில் கூறும் மாணவி

- 38 மாவட்டங்களின் பெயர்களை 19 விநாடிகளில் கூறும் மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றது.
- ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள முகமது காசீம் தெருவைச் சேர்ந்த அசாருதீன், அப்சான் நாச்சியா தம்பதியின் மகள் அதிபா. இவர் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் திறமையைக்கண்டறிந்து மேடை ஏற்றி கல்வியோடு இணைந்த தனித்திறனை வெளிப்படுத்த இப்பள்ளி தலைமை ஆசிரியை நல்லாசிரியர் விருது பெற்ற சாந்தி முருகானந்தம் உறுதுணையாக இருந்து வருகிறார். மேலும் பள்ளியை தூய்மையாக வைத்ததற்கான மாநில அரசின் புரஸ்கார் விருதும் பெற்றுள்ளார்.
அந்த வகையில் பள்ளியில் துறுதுறுவென சுறுசுறுப்பாக இயங்கும் அதிபா என்ற மாணவியை பெற்றோர் ஒத்துழைப்புடன் தனித்திறமையை வெளிப்படுத்த தயார் செய்துள்ளார். அதன்படி 2-ம் வகுப்பு மாணவி அதிபா, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களின் பெயர்க ளை 19 நொடிப்பொழுதில் சொல்வதோடு, இந்திய மாநிலங்கள் 28 -ன் பெயரையும் 16 நொடிப்பொ ழுதிலும், தமிழ் எழுத்துக்கள் 247யும் 53 நொடிகளிலும் கடகடவென மனப்பாடமாக கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இவரது செயலை பள்ளியின் தலைமை ஆசிரியையையும் பாராட்டு வதோடு, சக பள்ளி ஆசிரியைகளும், மாணவ மாணவிகளும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.