search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசத்தலைவர்கள்-தியாகிகள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
    X

    கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் பா.ஜ.க. மாவட்டத்தலைவர் தரணி முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தேசத்தலைவர்கள்-தியாகிகள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

    • ராமநாதபுரம் பா.ஜ.க சார்பில் தேசத்தலைவர்கள்-தியாகிகள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பா.ஜ.க. மாவட்ட தலைவராக கடந்த சில தினங்களுக்கு முன்பு தரணி முருகேசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பா.ஜ.க மாவட்ட தலைவராக கடந்த சில தினங்களுக்கு முன்பு இயற்கை விவசாயி தரணி முருகேசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் தீவிர பணியாற்றி வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேச தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவிடங்களுக்கு சென்று அவர்களது திருவுருவச்சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாநில விவசாய அணி பொதுச் செயலாளர் பிரவீன்குமார், மாநில இளைஞரணி செயலாளர் ராம்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பவர் நாகேந்திரன், கணபதி என்.ஆர்.மணிமாறன், ஆத்ம கார்த்திக், மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ்பாபு, ஒன்றிய தலைவர்கள் கோபால கிருஷ்ணன், ஸ்டாலின், அழகுமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மாவட்ட பா.ஜ.க சார்பில் வாகன அணிவகுப்பு நடை பெற்றது.அதனைத் தொடர்ந்து மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேசத்தலைவர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×