என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில்பாளையத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
- ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுகிறது.
- 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.
சரவணம்பட்டி,
ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
ரமலான் பண்டிகையையொட்டி கோவையை அடுத்த சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி கோவில்பாளையத்தில் உள்ள மதரஸா மஸ்ஜிதேநூர் பள்ளி வாசலில் முன்பு உள்ள சாலையில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். புத்தாடைகள் அணிந்து தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
Next Story