என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை அருகே  ரூ.36 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு
    X

    பாளையில் ரூ.36 லட்சம் நிலம் தொடர்பான ஆவணங்களை மனுதாரரிடம் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கொடுத்த காட்சி.

    பாளை அருகே ரூ.36 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு

    • பாளை கே.டி.சி.நகர் பிருந்தாவன்நகரை சேர்ந்தவர் ஜுடி. இவருக்கு சொந்தமாக பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 24 சென்ட் நிலம் உள்ளது.
    • இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூ. 36 லட்சம் மதிப்புள்ள 24 சென்ட் நிலத்தினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    பாளை கே.டி.சி.நகர் பிருந்தாவன்நகரை சேர்ந்தவர் ஜுடி. இவருக்கு சொந்தமாக பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 24 சென்ட் நிலம் உள்ளது.

    எஸ்.பி.யிடம் மனு

    இந்த நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து வேறொருவருக்கு இடம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக ஜுடிக்கு தெரியவரவே, அவர் தனது நிலத்தை மீட்டு தருமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் மனு அளித்தார்.

    இதுதொடர்பாக மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நிலமானது போலி ஆவணம் மூலம் வேறு நபருக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.

    போலி ஆவணம்

    இதனையடுத்து மாவட்ட வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் இணைந்து நடத்தி வரும் நில அபகரிப்பு தொடர்பான முகாமில் நில உரிமையாளர் ஜுடி மற்றும் எதிர் மனுதாரர்கள் ஆகியோர் முகாமிற்கு அழைக்கப்பட்டு, துணை கலெக்டர் தமிழரசி , தாசில்தார் பகவதிபெருமாள் ஆகியோர் முயற்சியால் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அது போலி ஆவணம் என உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து ஜுடியிடம் நிலத்தை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூ. 36 லட்சம் மதிப்புள்ள 24 சென்ட் நிலத்தினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மற்றொரு சம்பவம்

    நாங்குநேரி அருகே உள்ள தளபதி சமுத்திரம் வேப்பங்குளத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவருக்கு தளபதி சமுத்திரம் பகுதியில் நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஒலி ஆவணம் மூலம் மற்றொரு நபர் பத்திர பதிவு செய்திருப்பதை அறிந்த சுப்பையா தனது நிலத்தை மீட்டு தருமாறு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி புகார் அளித்து இருந்தார். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் டி.எஸ்.பி. ஜெயபால் பர்ணபாஸ் மேற்பார்வையில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மீரால் பானு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை நில உரிமையாளர் சுப்பையாவிடம் வழங்கினர்.

    Next Story
    ×