என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரூரில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துணை கலெக்டர் ஆய்வு
- சுரங்க நிதியிலிருந்து கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
- பணிகளை விரைவில் முடிக்க கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
திருவையாறு:
திருவையாறு ஒன்றியம் மருவூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் (2021-2022) நடைபெற்றுவரும்
ரூ.6.5 லட்சத்தில் நெல் உளர்த்தும் களம், ரூ.11 லட்சத்தில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவிகள்
கழிப்பறை 4.9 லட்சம், தொகுப்பு வீடுகள் மற்றும் தனிநபர் உறுஞ்சிகுழி அமைத்தல் பணி ஆகியவற்றை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த்
பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதை தொடர்ந்து வடுகக்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் (2021-2022) நடைபெற்றுவரும்
ரூ.3 லட்சத்தில் சிமெண்ட் சாலை பணி, ரூ.25.65 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம்,
ரூ.13.65 லட்சத்தில் கனிம மற்றும் சுரங்க நிதியிலிருந்து கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டு பணிகளை விரைவில் முடிக்க கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் காந்திமதி, ஜான்கென்னடி, ஒன்றிய பொறியாளர்கள் விஜயகுமார், மணி கண்டன்,
ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சரவணச் செல்வன், ஊராட்சிமன்ற த்தலைவர்கள் மணிகண்டன், விஜயபாஸ்கர்,
ஊராட்சி செயலர்கள் பரிமேலழகன், நந்தினி ஆகியோர் உடனிருந்தனர்.