என் மலர்
உள்ளூர் செய்திகள்
வட்டார வளர்ச்சி அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதம்
- ஒன்றிய குழு கூட்டத்தை புறக்கணித்து தி.மு.க. கவுன்சிலர் அருள் தேவி போராட்டத்தில் ஈடுபட்டார்.
- திம்மாவரம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர்.
வண்டலூர்:
காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள திம்மாவரம் ஊராட்சியில் முறையான அனுமதியின்றி அரசு இடத்தில் தனியார் பெயரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒன்றிய குழு கூட்டத்தை புறக்கணித்து தி.மு.க. கவுன்சிலர் அருள் தேவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தநிலையில் திம்மாவரம் ஊராட்சியில் இன்று காலை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலாவை முற்றுகையிட்டு சுத்திகரிப்பு நிலையம் மீது நடவடிக்கை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் முறையான அனுமதி பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.