என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஜெம்புகாவேரி வாய்க்காலில் செடி, கொடிகள் அகற்றம்
- விவசாய நிலங்கள் மழை காலங்களில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வந்தது.
- தண்ணீர் செல்ல தடையாக இருந்த செடி, கொடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அன்னப்பன்பேட்டை பகுதியில் உள்ள ஜெம்பு காவேரி வாய்க்காலில் ஏராளமாக செடிகள் மற்றும் ஆகாய தாமரை செடிகள் மண்டியிருந்தது. அதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வந்தது.
அதனால் ஜெம்புகாவேரி வாய்க்கால் மூலம் வடிகால் மற்றும் பாசன வசதிபெறக்கூடிய நெய்தலூர், குண்டூர், அன்னப்பன்பேட்டை மற்றும் பொந்தையா குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் மழை காலங்களில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வந்தது. இது குறித்த செய்தி மாலைமலர் நாளிதழில் வெளியாகி இருந்தது
இதன் எதிரொலியாக அன்னப்பன்பேட்டை பகுதியில் உள்ள ஜெம்பு காவேரி வாய்க்காலில் தண்ணீர் செல்ல தடையாக இருந்த செடிகள், கொடிகளை உடனடியாக அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
இதையடுத்து தண்ணீர் தற்போது தங்கு தடையின்றி பாசனத்திற்கு விரைந்து செல்கிறது.
ஜெம்பு காவேரி வாய்க்காலில் தண்ணீர் செல்ல தடையாக இருந்த செடி, கொடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாலைமலர் நாளிதழுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.