என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரில் சாலைகள் சீரமைப்பு காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரில் சாலைகள் சீரமைப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/04/11/1864237-013.webp)
சாலைகள் சீரமைப்பு பணிகளை காவேரிபட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் பார்வையிட்ட போது எடுத்தபடம்.
காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரில் சாலைகள் சீரமைப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரில் உள்ள சாலைகள் பழுதடைந்து உள்ளது.
- உடனடியாக அப்பகுதி சாலைகளை தனது சொந்த செலவில் சீரமைப்பதை பார்வையிட்டார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரில் உள்ள சாலைகள் பழுதடைந்து உள்ளது.
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் எனவே அப்பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவேரிபட்டினம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமாரிடம் குறைகளை தெரிவித்தனர்.
இதனையடுத்து உடனடியாக அப்பகுதி சாலைகளை தனது சொந்த செலவில் சீரமைப்பதை பார்வையிட்டார்.
அப்பொழுது உடன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் மாலினி மாதையன், கிளை செயலாளர் ஈஸ்வரன், முன்னாள் நகர துணைச் செயலாளர் முனிராஜ், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஹரிநாராயணன், அசோகன், மற்றும் அப்பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.