என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதியம்புத்தூர்-தட்டப்பாறை சாலையை சீரமைக்க கோரிக்கை
- புதியபுத்தூரிலிருந்து தட்டப்பாறை வரை 3கிலோ மீட்டர் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
- இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
புதியம்புத்தூர்:
கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி செல்லாமல் வடக்கில் இருந்து வரும் பஸ்கள் கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை, புதியம்புத்தூர் ,புதுக்கோட்டை, ஏரல் வழியாக திருச்செந்தூர் சேர்ந்தால் தூரம் குறைவு. லாரிகள், தனியார் வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்கிறது.
இந்த சாலையை அகலப்படுத்தும் பணியும், இந்த சாலையில் உள்ள பாலங்களை இரு மடங்கு ஆக்கும் பணியும் நடந்து வருகிறது. அதிகமான வாகனங்கள் சென்று வருவதால் புதியபுத்தூரிலிருந்து தட்டப்பாறை வரை 3கிலோ மீட்டர் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதியம்புத்தூரில் இருந்து பிரசன்னா மேல்நிலைப்பள்ளி வரை உள்ள ஒரு கிலோமீட்டர் ரோடு படுமோசமாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை இந்த சாலையை சரி செய்யாமல் இருப்பது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமமாக உள்ளது. இதனால் அடிக்கடி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக ஒரு கிலோ மீட்டர் சாலையில்சீரமைக்கும்படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.