என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த மூதாட்டி மீட்பு
- அழகாபுரம் ரெட்டியூர் பகுதி மற்றும் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியிலும் நிறைவாழ்வு முதியோர் இல்லத்தில் முப்பிடாரியம்மாள் எனும் மூதாட்டி சேர்க்கபப்ட்டார்.
- தங்குவதற்கு இடமின்றி முட்புதரின் உள்ளே படுத்துக் கிடந்தவரை அந்தப் பகுதி பொதுமக்கள் பார்த்து அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சேலம்:
சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பகுதி மற்றும் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியிலும் நிறைவாழ்வு முதியோர் இல்லத்தில் முப்பிடாரியம்மாள் எனும் மூதாட்டி சேர்க்கபப்ட்டார். இந்த மூதாட்டி வழி தவறி வந்து அழகாபுரம் ரெட்டியூர் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார்.
தங்குவதற்கு இடமின்றி முட்புதரின் உள்ளே படுத்துக் கிடந்தவரை அந்தப் பகுதி பொதுமக்கள் பார்த்து அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த காவலர்கள் பிரபாகரன், கோவிந்த ராஜ், சுரேஷ் ஆகியோர் உடனடி யாக விரைந்து வந்து விசாரித்து அவரை மீட்டு அருகிலிருந்த நிறைவாழ்வு முதியோர் இல்லத்தில் இல்ல மேலாளர் நிவேதிதா வசம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் ராஜபா ளையத்தை சேர்ந்தவர் என்றும் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்படட நிலையில் போக்கி டம் இல்லாமல் கடந்த சில மாதங்க ளாகவே சுற்றித்திரிவதாகவும் கூறினார். இல்லத்தில் சேர்க்கப்பட்ட பிறகு மூதாட்டி மகிழ்சசியுடன் ஊர் பொதுமக்க ளுக்கும், காவலர்களுக்கும் முதியோர் இல்ல நிர்வாகிகள் அண்ணாதுரை, ராமஜெயம் ஆகியோருக்கும் நன்றி கூறினார்.