என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கரன்கோவில் அருகே பள்ளி சுற்றுச்சுவர் கட்டாததால் விபத்து ஏற்படும் அபாயம்
Byமாலை மலர்26 Sept 2022 2:16 PM IST
- தமிழக அரசு பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூ.9 லட்சத்திற்கு மேல் நிதி ஒதுக்கி உள்ளது.
- 10 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படாத நிலை உள்ளது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் முக்கூட்டு மலை பஞ்சாயத்துக்குட்பட்டது நடுவப்பட்டி கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல் 5 வரை குழந்தைகள் பயின்று வருகின்றனர். தமிழக அரசு பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூ.9 லட்சத்திற்கு மேல் நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை கட்டப்படாத நிலை உள்ளது. ஆகவே அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்களும் விரைந்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
X