என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கோத்தகிரி தட்டப்பள்ளத்தில் சாலை விரிவாக்க பணி தொடக்கம் கோத்தகிரி தட்டப்பள்ளத்தில் சாலை விரிவாக்க பணி தொடக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2022/10/29/1783535-saalai.jpg)
கோத்தகிரி தட்டப்பள்ளத்தில் சாலை விரிவாக்க பணி தொடக்கம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு சாலை வளைவு உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சவாலாக இருந்து வந்தது
- 2 ஆண்டுகளில் மட்டும் இந்த சாலை வளைவில் 50-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் ஏற்பட்டு இருக்கின்றன.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அதிகப்படியான குறுகிய சாலை வளைவுகள் உள்ளன.
இந்த சாலை வளைவுகளில் வெளியூர் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது வளைவுகள் தெரியாமல் வாகனங்களை சாலைகளின் ஓரத்தில் இறக்கி விபத்தில் சிக்கி விடுவர்.
குறிப்பாக தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு சாலை வளைவு உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சவாலாக இருந்து வந்தது.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்த சாலை வளைவில் 50-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் ஏற்பட்டு இருக்கின்றன. உயிர் பலிகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
இந்த சாலை வளைவை சரி செய்ய வேண்டும் என்று பல தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தது.
இதனால் இந்த சாலையை ஆய்வு செய்த அதிகாரிகள் அதனை விரிவு செய்ய முடிவு செய்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்த சாலை வளைவை விரிவு செய்ய பணிகள் நடைபெற துவங்கின. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.