என் மலர்
உள்ளூர் செய்திகள்
ராதாபுரம் அருகே காருக்குள் சிக்கி பலியான 3 குழந்தைகள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- கார் கதவு மூடிக்கொண்டதில் 3 குழந்தைகளும் மூச்சுத்திணறி இறந்தனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி
நெல்லை:
ராதாபுரம் அருகே உள்ள பெருங்குடியை அடுத்த மஜரா லெப்பை குடியிருப்பு பாலர் பள்ளி தெருவை சேர்ந்தவர் நாகராஜன்.
இவரது மகள் நிதிஷா(வயது 7), மகன் நிதிஷ்(5) ஆகியோர் அப்பகுதியில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காருக்குள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த சுதன் என்பவரின் மகன் கபிசாந்த்(4) என்பவரும் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கார் கதவு மூடிக்கொண்டதில் 3 குழந்தைகளும் மூச்சுத்திணறி இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராதாபுரத்தில் நடந்த இந்த துயரசம்பவம் குறித்து விபரம் அறிந்து மிகவும் துயருற்றேன்.
உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டு உள்ளேன் என கூறி உள்ளார்.