என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
சூளகிரியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநாடு
By
மாலை மலர்30 May 2023 1:51 PM IST

- மாநாட்டிற்கு சூளகிரி வட்டக்கிளைத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.
- இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு சூளகிரி வட்டக்கிளைத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வட்டச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்தார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல்ரவிகுமார், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள், ஜேம்ஸ் , டென்சிங், மூகிலன், தினேஷ், ஜெகதாம்பிகா, சியாமலா மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story
×
X