என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடு
Byமாலை மலர்29 Sept 2022 1:10 PM IST
- ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும்.
- குறிப்பிட்ட கால அளவுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.
சேலம்:
சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பிட்ட கால அளவுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது என்று போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தெரிவித்துள்ளார். அதேசமயம், விளையாட்டு, திருமணம், இறுதிஊர்வலம், மத நிகழ்ச்சிகள் போன்றவைக்கு இது பொருந்தாது என்றும், நேற்று முதல் அடுத்த மாதம் 12-ந் தேதி நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
X