என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தீவட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது தீவட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2023/11/16/1982217-3.webp)
X
தீவட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
By
மாலை மலர்16 Nov 2023 12:49 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பூசாரிபட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் அருணாச்சலம் (31). இவரது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார்.
- சம்பவதன்று அதிகாலை பார்த்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிளை காணவில்லை.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த பூசாரிபட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் அருணாச்சலம் (31). இவரது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். சம்பவதன்று அதிகாலை பார்த்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அருணாச்சலம் இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சந்தேக அடிப்படையில் கே.மோரூர் சவுல்பட்டி கொட்டாய் பகுதியை சேர்ந்த சேட்டு (32) என்பவரை பிடித்து விசாரித்தனர். இவர் பூசாரிபட்டியில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு வந்தபோது அருணாச்சலத்தின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்து.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
X