என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![இளம்பெண் கொலை வழக்கில் கைதானரவுடியின் கூட்டாளிகள் ஜெயிலில் அடைப்பு இளம்பெண் கொலை வழக்கில் கைதானரவுடியின் கூட்டாளிகள் ஜெயிலில் அடைப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/07/06/1910688-3.webp)
இளம்பெண் கொலை வழக்கில் கைதானரவுடியின் கூட்டாளிகள் ஜெயிலில் அடைப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- லட்சுமி (வயது 42). இவர், 3-வதாக பிரபல ரவுடி மேட்டூர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
- கடந்த மாதம் 19-ந்தேதி சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் லட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சேலம்:
சேலம் சீரகாபாடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (வயது 42). இவர், 3-வதாக பிரபல ரவுடி மேட்டூர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த மாதம் 19-ந்தேதி சமத்துவபுரத்தில் உள்ள வீட்டில் லட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக அவரது 3-வது கணவரான மேட்டூர் ரகுவை போலீசார் தேடி வந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் அவரது கூட்டாளிகளான ேஷக் மைதீன்(29), ஜோசப் என்கிற பாலாஜி(19), ஆனந்த் (28) ஆகியோர் பவானி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசார் கடந்த 29-ந்தேதி ரகுவை காவலில் எடுத்து விசாரித்ததில் லட்சுமி கள்ளத்தொடர்பை கைவிடாததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். பின்னர் ரகுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கார் பறிமுதல்
இந்த வழக்கில் தொடர்புடைய ரகுவின் கூட்டாளிகள் ேஷக் மைதீன், ஜோசப் என்கிற பாலாஜி , ஆனந்த் ஆகியோரிடம் விசாரிக்க ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு சேலம் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 நாட்கள் அனுமதி கொடுத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் முதல் அவர்களிடம் நடத்திய விசாரணையில் லட்சுமி கொலையில் 3 பேரும் உடந்தையாக இருந்ததும், இதற்காக ெசாகுசு கார் ஒன்றை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இந்த காரை போலீசார் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தினர்.
ஜெயிலில் அடைப்பு
மேலும் இவர்கள் 3 பேருடைய போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்ததால் அவர்களை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.