என் மலர்
உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில்பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
- காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது.
- இக்கோவிலின், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை தீர்த்தக் குடம் ஊர்வலம் நடைபெற்றது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம், காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது. எடப்பாடி சுற்று வட்டார பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான இக்கோவிலின், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை தீர்த்தக் குடம் ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக கல்வடங்கம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராடிய திரளான முருக பக்தர்கள், கும்பாபிஷேக விழாவிற்காக குடங்களில் புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
நகரின் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக மேள தாளம் முழங்க நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலம், பால தண்டாயுதபாணி சாமி கோவில் வளாகத்தில் நிறைவுற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய தீர்த்த குடங்களுக்கு யாக பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், நாளை மறுநாள் காலை, இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.