என் மலர்
உள்ளூர் செய்திகள்

பசும்பால் விலையை ரூ.50 ஆக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

- மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும்.
- மேலும் 100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும். மேலும் 100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம், மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரம், மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம், மக்காச்சோளம் ரூ.3 ஆயிரம், பசுமாட்டுப்பால் லிட்டர் ரூ.50, எருமை பால் லிட்டர் ரூ.75 வழங்கிட வேண்டும்.கறிக்கோழிகள் வளர்ப்பிற்கு கிலோ ரூ.12 விலை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட வேண்டும். இந்திய அரசு விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு கடன் நிவாரண ஆணையம் அமைக்க வேண்டும்.தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ளதை போல வருடம் தோறும் ரூ.10 ஆயிரம் உழவு மானியமாக தமிழக அரசு வழங்க வேண்டும். தென்னை, பனைகளில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்து இருந்தனர்.