என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![எடப்பாடி பகுதியில் 1 மணி நேரம் கொட்டிய கன மழை எடப்பாடி பகுதியில் 1 மணி நேரம் கொட்டிய கன மழை](https://media.maalaimalar.com/h-upload/2023/11/03/1976449-001.webp)
X
எடப்பாடி பகுதியில் 1 மணி நேரம் கொட்டிய கன மழை
By
மாலை மலர்3 Nov 2023 3:33 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
- மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 28.6 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் மாநகரில் 0.6 மி.மி. மழை பெய்தது
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாநகரில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 28.6 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் மாநகரில் 0.6 மி.மி. மழை பெய்தது.
Next Story
×
X