search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக கோப்பையை இந்தியா வெல்ல வேண்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
    X

    உலக கோப்பையை இந்தியா வெல்ல வேண்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

    • உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது.
    • நாளை இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் உலககோப்பைக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளன.

    சேலம்:

    தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது.

    நாளை இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் உலககோப்பைக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளன.

    இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டி சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.

    தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் உடல் நலத்துடன் விளையாடி இந்தியாவிற்கு கோப்பையை பெற்றுத்தர வேண்டி சிறப்பு மந்திரங்கள் ஓதப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×