என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![எடப்பாடி அருகே தந்தையுடன் மீன்பிடிக்க சென்ற பள்ளி மாணவன் மாயம் எடப்பாடி அருகே தந்தையுடன் மீன்பிடிக்க சென்ற பள்ளி மாணவன் மாயம்](https://media.maalaimalar.com/h-upload/2023/08/22/1936135-8.webp)
எடப்பாடி அருகே தந்தையுடன் மீன்பிடிக்க சென்ற பள்ளி மாணவன் மாயம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கோவிந்தன் (56). இவரது மகன் நந்தீஸ்வரன் (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- சித்தையன், மகன் நந்தீஸ்வரன் ஆகியோருடன் எடப்பாடி அருகே உள்ள பெரிய ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம் மணியக்காரன் வளவு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (56). இவரது மகன் நந்தீஸ்வரன் (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கோவிந்தன் நேற்று முன்தினம் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சித்தையன், மகன் நந்தீஸ்வரன் ஆகியோருடன் எடப்பாடி அருகே உள்ள பெரிய ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.
அங்குள்ள ஏரிக்கரையில் மகனை அமர வைத்துவிட்டு நண்பர் சித்தையனுடன் கோவிந்தன் ஏரிக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மாயம்
மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய கோவிந்தன் அங்கே மகனை காணாமல் திடுக்கிட்டார். பின்னர் தனது உறவினர்களுடன் ஏரிக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடினார்.
எங்கு தேடியும் நந்தீஸ்வரன் கிடைக்காத நிலையில் இது குறித்து கோவிந்தன் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவன் நந்தீஸ்வரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.