என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ரூ.8.5 லட்சத்திற்கு தேங்காய் பருப்புகள் விற்பனை ரூ.8.5 லட்சத்திற்கு தேங்காய் பருப்புகள் விற்பனை](https://media.maalaimalar.com/h-upload/2023/09/06/1945182-7.webp)
X
ரூ.8.5 லட்சத்திற்கு தேங்காய் பருப்புகள் விற்பனை
By
மாலை மலர்6 Sept 2023 1:37 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வாரம் தோறும் தேங்காய் பருப்பு விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது.
- பொது ஏலத்தின் வாயிலாக சுமார் 250 மூட்டை தேங்காய் பருப்புகள், ரூபாய் 8 லட்சத்து 51 ஆயிரத்து 660 க்கு விற்பனையானது.
சேலம்:
கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரம் தோறும் தேங்காய் பருப்பு விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தின் வாயிலாக சுமார் 250 மூட்டை தேங்காய் பருப்புகள், ரூபாய் 8 லட்சத்து 51 ஆயிரத்து 660 க்கு விற்பனையானது. இதில் ஒரு குவிண்டால் தேங்காய் பருப்பு குறைந்தபட்சம் ரூ.7525 முதல் அதிகபட்சமாக ரூ.7828 வரை விற்பனையானது. தற்போது இப்பகுதியில் தொடர் மழைப்பொழிவு இருந்து வரும் நிலையில், தேங்காய் பருப்புகளுக்கு கூடுதல் விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Next Story
×
X